Skip to main content

25 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை (08.01.2020) வாக்கு எண்ணிக்கை!

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

தமிழகத்தில் 25 ஊராட்சி ஒன்றியங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை நாளை (08.01.2020) நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம்  உள்ளிட்ட மாவட்டங்களில் 14 ஒன்றியங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதேபோல் சேலம், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் நாளை (08.01.2020) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

state election commission announced vote counting


தேர்தல் முடிவு அறிவிப்பை வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அன்றைய தினமே தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வரும் 10- ஆம் தேதிக்கு முன்னரே பதவியேற்க வேண்டும். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




 

சார்ந்த செய்திகள்