Skip to main content

சொந்த அப்பாவையே லாரி ஏற்றி கொலை செய்த மகன் கைது

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

nn

 

நிலத்தகராறு காரணமாக பெற்ற தந்தையையே லாரி ஏற்றி மகன் கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரிம்பாக்கத்தை சேர்ந்தவர் எத்திராஜ். இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். எத்திராஜுடைய இளைய மகன் ராமச்சந்திரன் மதுவிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு தன் தந்தை எத்திராஜிடம் கேட்டுள்ளார். இதன் காரணமாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்திலிருந்த ராமச்சந்திரன், இன்று காலை எத்திராஜ் வயலுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் லாரியை விட்டு ஏற்றிக் கொலை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து ராமச்சந்திரனை கைது செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்