Skip to main content

ஆறு பேர் விடுதலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Six released - Chief Minister MK Stalin's advice!

 

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, மற்ற ஆறு பேர் விடுதலைத் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். 

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21/05/2022) நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, மற்ற ஆறு பேர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்