Skip to main content

குடிக்கு இரையான இளைஞன்-குடிகாரர்களுக்கு மரண அதிர்ச்சி!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

அளவுக்கு மீறினால்அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்கிற பழமொழி உண்டு. ஆனால் நஞ்சு என தெரிந்ததும் அதை அமிர்தம் போல் அளவுக்கு அதிகமாக குடித்தால் என்னவாகும் என்பதற்கு அதற்கு மதுவுக்கு இரையான இளைஞர் சுந்தரே ஒரு உதாரணம் என்கிறார்கள் ஈரோட்டுவாசிகள்.

 

 shock for drunken teenagers


ஈரோடு கருங்கல்பாளையம் கேஏஎஸ் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் சுந்தர் 38 வயதாகும் இவருக்கு இன்னமும் திருமணம் இல்லை.ஜவுளி மடிக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட காலமாக மதுப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் தொழிலுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு சென்ற வாரம் வாங்கிய சம்பளத்தை வைத்து டாஸ்மாக் சென்றார் அங்கு தொடர்ந்து பல பாட்டில் மதுவை வாங்கி  அளவுக்கு அதிகமாக குடித்தார். பிறகு தட்டுத்தடுமாறி அப்படியே வீட்டுக்கு வந்து அவரது அறைக்கு சென்றார்.

மாலை நீண்ட நேரம் ஆகியும் சுந்தரின் அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் சிவகுமார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த டாக்டர்கள் இவரின் உடலில் ஆல்ககால் அளவு அதிமகி அது விஷமாக மாறிவிட்டது. ஆகவே போதையிலேயே சுந்தர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

போதை மயக்கத்திற்கு ஆசைப்பட்டு அளவு மீறிய குடியால் இந்த இளைஞன் இறந்தது அப்பகுதி குடிகாரர்களை மரண அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்