Skip to main content

அநாதை சிறுமிகள் பாலியல் பலாத்காரம்!!! மூவர் கைது...

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
tiruvannamalai

 


திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் மெர்சி என்ற பெயரில் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் பெற்றோர் இல்லாத பெண் மற்றும் ஆண் குழந்தைகள் தங்கி படித்துவருகின்றனர்.
 

இந்த காப்பகத்தின் உரிமையாளர் லூபன்குமார், அவரது மனைவி மெர்சிராணி மற்றும் மணவாளன் ஆகிய 3 பேரும் காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரகசிய புகார் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு சென்றது.
 

அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. அதன்படி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் லூபன்குமார், அவரது மனைவி மெர்சிராணி அவரது நண்பர் மணவாளன் ஆகிய 3 பேரையும் இன்று போலிஸார் கைது செய்துள்ளனர். போஸ்கோ சட்டத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்