Skip to main content

”பிளஸ்-1 மாணவியை பாலியல்கொடுமை செய்த 2 பேர்.. நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!’

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் நிதின். கட்டித் தொழிலாளியான இவன், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, 2 நாட்களுக்கு முன்னர் கடத்திச் சென்றுவிட்டான். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ஒரு வீட்டில் வைத்து, அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். கடத்தலுக்கு துணையாக இருந்த நண்பன் சாலமனும் (இவனும் கட்டிடத் தொழிலாளி)அந்த பெண்ணை வல்லுறவு செய்துள்ளான். 

 

ss

 

விடிய விடிய 2 பேரும் அந்த பெண்ணை கொடூரமாக பலவந்தப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். இதற்கிடையே மாணவியை காணவில்லை என பெற்றோர் தரப்பு கொடுத்த புகாரின் பேரில், நிதினின் தொலைபேசி எண்ணை ட்ரேஸ் செய்துள்ளனர் போலீஸார். 

 

ss

 

அவனது செல்போன் சிக்னல் வல்லநாட்டை காட்டியதால், அங்கு வந்து இளம்பெண்ணை போலீஸார் மீட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடம் ஒதுக்குப்புறமான வீடு என்பதால், மாணவியால் உதவிக்கு யாரையும் அழைக்கமுடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த  சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்