Skip to main content

மூத்த தலைவர் ஈ.வி.கே.சம்பத்தின் பிறந்தநாள் விழா காங்கிரஸார் மரியாதை (படங்கள்) 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த ஈ.வி.கே.சம்பத்தின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், இன்று காலை 11 மணிக்கு அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் முன்னணித் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமோனர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்