Skip to main content

சீமான், ராமதாஸுக்கு கனிமொழி பதிலடி... 

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

தமிழகத்தில் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சூறாவழி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்ரவாண்டியில் நடந்த நாம் தமிழர் பிரச்சாரத்தின்போது சீமான், நாங்கள்தான் ராஜீவ் காந்தியை கொலை செய்தோம் என்று சர்ச்சையாக பேசினார்.
 

kanimozhi

 

 

இதனையடுத்து சீமானுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்தன. காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சீமானின் கருத்தை எதிர்த்து அவரது உருவ பொம்மையை எரித்து தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் செர்பியாவுக்கு சென்று தற்போது சென்னை திரும்பியுள்ள திமுக எம்பி கனிமொழியிடம் இதகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சீமானின் கருத்து அநாகரீகமானது” என்று  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அதேபோல ட்விட்டரில் பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டை வைத்தார். அதற்கு மு.க.ஸ்டாலின் முரசொலி கட்டிடத்தின் பட்டாவை ட்விட்டரில் பதிவிட்டு பதிலடி கொடுத்தார். அதுகுறித்தும் கனிமொழியிடம் கேட்கையில், “முரசொலி அலுவலக இடம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகின்றனர், ஆதாரம் இருந்தால் நிரூபிக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்