Skip to main content

மூன்றாவது நாளாக தொடரும் யானையை தேடும் பணி!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

 The search for the elephant continues for the third day!


கோவையின் ஆனைக்கட்டி பகுதி தமிழக - கேரள எல்லைக்கு இடைப்பட்ட பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் சில மலை கிராமங்களும் உள்ள நிலையில் கோவை ஆனைக்கட்டி பட்டிச்சாலை பகுதியில் காட்டு யானை ஒன்று இரண்டு நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் காணப்பட்டது. இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால்  தமிழக எல்லையில் இருக்கும் அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா? தமிழக வனத்துறையா? என்ற குழப்பம் நிலவியது. இது தொடர்பாக தமிழக வனத்துறை கேரள வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் அந்த யானை மாயமானது.

 

8 வயது கொண்ட அந்த ஆண் யானையைத் தேடும் பணிக்காக கோவை டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று செங்குட்டை பகுதியில் யானையை கண்டறிந்த நிலையில், யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. ட்ரோன் கேமரா மூலம் யானையை தேடும் பணி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்