Skip to main content

மருத்துவனைகளாக மாறும் பள்ளி, கல்லூரிகள்...

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

கரோனா வைரஸ் தாக்குதலால் நோயாளிகளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதகரித்து வருகிறது. இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் மருத்துவமனைகளில் இருந்தாலும் அவை எதிர்காலத்தில் போதாது என்பதை கருத்தில்கொண்டு பெரிய, பெரிய இடங்களை பொதுசுகாதார துறையோடு சேர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் தேடிவருகின்றன.

 

 Schools and colleges that become medical hospital


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை நகரங்களில் நோய் தொற்றினால் அதிகாமானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு தேவையான கட்டில்கள் மருத்துவமனைகளில் போட முடியாத நிலை இருப்பதால், சில பள்ளிகளை தேர்வு செய்து அங்குள்ள வகுப்பறைகளை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன்அருள் செய்துள்ளார்.

 

 Schools and colleges that become medical hospital

 

அதன்படி முதல் கட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 1000 படுக்கைககள் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்