Skip to main content

மெழுகாய் உருகும் மழலை மனங்கள்..! சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தும் சிறார்கள். (படங்கள்)

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். 80 மணிநேரம் நடைபெற்ற கடுமையான மீட்புப்பணி தோல்வியில் முடிந்ததால் சுஜித் உயிரிழந்தான். அவன் குழியில் சிக்கியிருந்தபோது தமிழகம் முழுவதும் அவனுக்காக வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழக மக்கள் சுஜித் உயிருடன் மீட்கப்படுவான் என மிகுந்த எதிர்ப்பார்பில் காத்திருந்தனர். இன்னிலையில் அவன் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சுஜித் உடல் வெளியே எடுக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 

தொடந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளிலும், பொது இடங்களிலும் சிறுவன் சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள பால லோக் பள்ளி மாணவர்கள் கையில் முழுகுதிரிகளை பிடித்தவாறு சுஜித் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.  

சார்ந்த செய்திகள்