Skip to main content

எஸ்.டி, எஸ்.சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு... லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

Published on 03/12/2021 | Edited on 04/12/2021

 

bribe

 

பழங்குடியின மற்றும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடந்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் பத்து விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்