Skip to main content

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இளவரசி விடுதலை! 

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

sasikala relative ilavarasi released

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் என தெரிவித்திருந்த நிலையில், பிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தமிழகம் வருவார் என நேற்று (04.02.2021) டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சசிகலாவுடன் சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் உறவினரான இளவரசி பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்து  தற்போது விடுதலை ஆகியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்