Skip to main content

சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

 

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை  ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண் பிறப்பித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.    ரேடியன் நிறுவனத்திடன் 2 கோடி ரூபார் கடன் பெற்ற வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

s

 

ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர். படம் தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் ரூ 2 கோடி கடனாகப் பெற்றுள்ளது. கடனை அடைக்க ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திற்கு கொடுத்த செக் ஒன்று பவுன்ஸ் ஆகியுள்ளது. அதனால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.


 
அந்த வழக்கின் விசாரணைக்கு  சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் நிதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்