Skip to main content

கிராம அஞ்சலக ஊழியர்கள் போராட்டம்

Published on 16/08/2017 | Edited on 16/08/2017
கிராம அஞ்சலக ஊழியர்கள் போராட்டம்



கிராம அஞ்சலக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன் கிழமை முதல் தொடர் போராட்டம் தொடங்கியதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 354 கிராம அஞ்சல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நகர  தபால் நிலையங்களை சார்ந்து கிராமங்களில் இயங்கி வரும் கிராம தபால் நிலையங்களில் பணி செய்யும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன் கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் கோரிக்கைகளாவன.. 

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி இலாக்கா ஊழியராக்க வேண்டும். மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து மிரட்டும் அதிகாரிகளின் ஆணவப்போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கியுள்ளர்.

354 கிராம தபால் நிலையம் திறக்கவில்லை :

இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 354 கிராம தபால் நிலையங்கள் திறக்கவில்லை. மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் 750 கிராம தபால் நிலைய ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

அதே போல கீரமங்கலம் தபால் நிலையத்தின் கீழ் இயங்கி வரும் கொத்தமங்கலம், நகரம், காசிம்புதுப்பேட்டை, மேற்பனைக்காடு கிழக்கு, மேற்கு, பெரியா@ர், ஆவணத்தான்கோட்டை, எருக்கலக்கோட்டை, பூவற்றக்குடி, பூவை மாநகர், திருநா@ர், குளமங்கலம், பனங்குளம் ஆகிய 13 கிராம தபால் நிலையங்கள் போராட்டத்தால் திறக்கப்படவில்லை. மேலும் 13 கிராம தபால் நிலைய ஊழியர்களும் கோட்ட துணைச் செயலாளர் வீரையா தலைமையில் கீரமங்கலம் தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிராம தபால் நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

பகத்சிங்

சார்ந்த செய்திகள்