Skip to main content

காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதிக்கு ரூ.23 கோடி நிதி - தமிழக அரசு தகவல்

Published on 02/08/2018 | Edited on 02/08/2018


காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதிக்காக 22.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

லண்டனில் வசித்து வரும் ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் "கடலூர் குடும்பநல நீதிமன்றத்தில் குடும்ப தகராறு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை, காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த கடலூர் கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட நீதிமன்றத்திற்கு, சிறைக்கும் இடையே மட்டுமே காணொலி காட்சி வசதிகள் உள்ளன. வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்த வசதி இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

 

 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, காணொலி காட்சி வசதிக்காக அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது? என்பது குறித்து விளக்கமளிக்க உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட போவதாக எச்சரிக்கை செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் 31ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் காணொலி காட்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 233 காணொலி காட்சி உபகரணங்கள் வாங்க ரூ.22 கோடியே 83 லட்சத்து 4 ஆயிரத்தை அரசு ஒதுக்கியுள்ளது’ என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்