திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்து வருகிறது.
குழந்தை 75 அடியிலேயேதான் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. குழந்தையின் கை ஹைட்ராலிக் கருவியினால் இறுக கட்டப்பட்டதால் இதற்கு மேல் குழந்தை கீழே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு மேல் அந்த கருவிமூலம் மீட்க முயற்சித்தால் மண் சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ஹைட்ராலிக் கருவியின் மூலமும், அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் அந்த ரோபோ கருவி மூலமும் மீட்பதற்கான அந்த பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓஎன்ஜிசி குழி தோண்டும் ரிக் இயந்திரம் தற்பொழுது மனப்பாறை தாண்டி வந்துகொண்டிருக்கிறது. அந்த வாகனம் வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் இல்லாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த வாகனம் தற்பொழுது மணப்பாறையை தாண்டியுள்ளது. அதேபோல் சம்பவ இடத்தில் அந்த வாகனம் சமதளத்தில் இருப்பதற்கான ஏற்பாடுகள் ஜேசிபி மூலம் செய்யப்பட்டு வருகிறது.