Skip to main content

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை... உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Relatives involved in the struggle to refuse to get the body

 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் அதிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 முக்கிய குற்றவாளிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் முன்னாள் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ரவி முருகையா உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும்.

 

மேலும் அவர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகளை முன்வைத்து மல்லியம்பத்து ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இறந்துபோன சிவகுமாரின் உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Relatives involved in the struggle to refuse to get the body

 

அவர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பார்கள் எனவே மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய சிவக்குமாரின் உடலை வாங்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது கதிர்வேல் மற்றும் ரவி முருகையா மீது வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே சிவக்குமாரின் உடலை நாங்கள் வாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்