Skip to main content

''குறைந்த வித்தியாசத்தில் வெற்றிபெற இதுவே காரணம்'' - துரைமுருகன் விளக்கம்!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

"This is the reason for success by a small margin" - Duraimurugan explanation

 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

 

இந்தத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அங்கு வெற்றிபெற்றாலும் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தபிறகு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கமளித்த துரைமுருகன், ''இதற்கு முன்னாள் கூட இப்படி வந்திருக்கிறது. இதற்கு சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் தான் காரணம்'' என்றார்.  

 
 

 

சார்ந்த செய்திகள்