Skip to main content

''எந்த விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளத் தயார்'' - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

 '' Ready to endure criticism '' - Interview with Minister Sekar Babu

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேம்படுத்தப்பட்ட தமிழ் ஓதுவார் பயிற்சிப் பள்ளியை திறந்துவைத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், ''திருக்கோவிலுக்கு ஏதாவது தங்கம் தேவைப்பட்டால், வைப்புநிதி வைக்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்து தங்கத்தைக் கோவிலுக்குப் பயன்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல் தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளை மூன்று மண்டலங்களுக்கும் நியமிக்க உத்தரவிட்டிருந்தார். அந்த ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனமும் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முதல்வரை சந்தித்து, முதல்வரின் வழிகாட்டுதல்படி நகைகளைப் பிரிக்கும் பணியை மேற்கொள்வார்கள். எங்களைப் பொறுத்தவரை பயன்பாடற்று இருக்கின்ற எந்தப் பொருளாக இருந்தாலும் அது தெய்வத்திற்குப் பயன்படும் என்றால் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்