Skip to main content

நாட்டுத் துப்பாக்கி வெடித்து மேஸ்திரி படுகாயம்...!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில், சண்முகம் என்பவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Ranipet District-Gun-incident

 



ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த களர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே நரிக்குறவர் முரளி இரு சக்கர வாகனத்தில் சென்றார். அவரது வாகனத்தின் பின்புறம் நாட்டு துப்பாக்கி வைத்து இருந்தார். வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, வாகனத்தின் பின்புறத்தில் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி திடீரென வெடித்தது.

அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த சாத்தூர் கிராமம் அண்ணாதெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மேஸ்திரி சண்முகம்(38) என்பவர் மீது நாட்டு குண்டுகள் பாய்ந்தது. அதில் கழுத்து, கால்கள், வயிற்றில் பட்டு காயமடைந்து அவர் கீழை விழுந்தார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சண்முகத்தை மீட்டு முதலுதவி செய்து ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக ஆற்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த நாட்டு துப்பாக்கிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்