Skip to main content

 ரஜினிகாந்தின் பெற்றோருக்கு மணிமண்டபம்! திருச்சியில் ஒரு நாச்சிக்குப்பம்!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 


 திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு தமிழக மக்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அவர்களின் மேல் உள்ள பிரியத்தில் முதல்வர் பதவியையே கொடுத்திருக்கிறார்கள். அதே போல நடிகர்கள், நடிகைகள் பெயரில் பொருட்கள், வெளி வந்து சந்தைகளில் அதிக அளவில் விற்றுவருவது வாடிக்கை தான். இதற்கு ஒருபடி மேல் போய் நடிகை குஷ்புவுக்கு திருச்சியில் கோவில் கட்டினார். அப்போது அது பெரிய அளவில் அதிர்ச்சியாகவும்,ஆச்சரியமாகம் பரபரப்பாக பேசப்பட்டது. 

 

r

 

தமிழக அரசியலில் முழுநேர அரசியலுக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் பெற்றோருக்காக திருச்சியில் மணிமண்டபம் கட்டியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியமான தகவல். 

 

r

 

ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருக்கும் ஸ்டாலின் புஷ்பராஜ்.   ரியல் எஸ்டேட் வியாபாராம் செய்து வரும் இவர். 2009 வருடங்களுக்கு முன்பு ரஜினி உடல்நலம் சரியில்லாத நாட்களில் இறைவனிடம் வேண்டுதல் செய்யும் போது, என் தலைவரின் உடல் சரியானால் அவரை பெற்றெருத்த தாய் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுகிறேன் என்று வேண்டுதல் செய்திருந்தாராம். ரஜினிகாந்தின் சொந்தவூரான நாச்சிக்குப்பம் - செய்திருக்க வேண்டியதை திருச்சியில் ரஜினியின் பெற்றோர் ராம்பாய் -ரானேஜிராவ் இரண்டு பேருக்கு 35 இலட்ச ரூபாய் செலவில் தன்னுடைய தனிப்பட்ட வேண்டுதலுக்காக மணி மண்டபம் தயார் செய்திருக்கிறார்கள். 

 

r

 

இதை புனிதப்படுத்துவதற்காக மார்ச் 25ம் தேதி நாள் குறித்து இன்று ரஜினியை நேரடியாக சந்தித்து  காலை அழைப்பிதழை கொடுத்திருக்கிறார்கள். 

 

r

 

இந்த ரஜினிகாந்த் தாய் தந்தையரின் உருவங்களை புனிதப்படுத்தும் பூஜையை ரஜினிகாந்த் குடும்பத்தினரே செய்கிறார்கள் என்பதால், இதற்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் நேரடியாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ரஜினிகாந்த மன்றத்தில் உள்ளவர்கள். 
 

சார்ந்த செய்திகள்