Skip to main content

"அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை" - ஓபிஎஸ் பேட்டி!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

jk


முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். சென்னையில் உள்ள அவர் வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதில், " அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. ரெய்டு மூலம் அதிமுகவை அச்சுறுத்த நினைத்தால் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராகவே இருக்கிறது. இதுபோன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை திமுக நிறுத்த வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்