Skip to main content

சுடுகாடு, குடிநீர், சுற்றுச்சூழல் மாசு...! - ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

The public who petitioned the Collector's Office

 

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 23ந் தேதி திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ சந்தோஷிணி சந்திரா தலைமையில் நடந்தது. அதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்து மனுக்களை அவரிடம் வழங்கினார்கள். அப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம் வருந்தியா பாளையம் பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடுத்தனர். 

 

பிறகு அவர்கள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 2 வருந்திய பாளையத்தில் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 ஊர்களிலிருந்து கழிவுநீர் கொண்டுவந்து வருந்திய பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாக தெரியவந்துள்ளது. மேற்படி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தில் வருந்தியபாளையம், புதூர், ரோட்டூர், ராமநாதபுரம் மற்றும் முனியப்பன் சுவாமி கோவில் ஆகிய ஊர்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கும், புதைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் மேற்கண்ட ஊர் பொதுமக்கள் சுடுகாடு இன்றி மிகவும் பாதிக்கப்படுவார்கள். குடிநீர் தேவைகளும் பாதிக்கப்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் கழிவுநீர் மூலம் சுமார் 150 ஏக்கர் மஞ்சள் கரும்பு நெல் வாழை முதலிய பயிர்கள் மாசடைந்து எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்தப் பகுதியில் கழிவுநீர் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்றனர்.

 

அதேபோல் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள அண்ணாநகர் புது காலனி பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து டி.ஆர்.ஓ. விடம் மனு கொடுத்தனர். அவர்கள் கூறும்போது, "நாங்கள் மேற்கண்ட முகவரியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். தமிழக அரசின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. நாங்கள் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் இங்கு தான் வசித்து வருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு உள்ளது. ஆனால் எங்கள் பகுதி மக்களுக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீர் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றார்கள்.

 

இதேபோல் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர், முத்து கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அவர்கள், நாங்கள் மேற்கண்ட இடத்தில் 30 குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். அரசு புறம்போக்கு நிலத்தில் எங்க ஊரைச் சேர்ந்த மூதாதையர்கள் பல வருடங்களாக சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் தனியார் சிலர் சுடுகாட்டில் உள்ள பல பகுதிகளில் மணலை அள்ளினார்கள். இது குறித்து எங்க ஊர் பொதுமக்கள் கேட்டபோது இது எங்கள் பட்டா நிலத்தில் உள்ளது உங்களுக்கு சுடுகாடு கிடையாது என்று அவர்கள் திட்டினார்கள். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு சுடுகாட்டை அளவீடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதேபோல் எங்க ஊருக்கு சாலை வசதியும் இல்லை. நாங்கள் இதுவரை ஓடை பள்ளத்து ஓரமாக புறம்போக்கு வண்டிப் பாதையை பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த வண்டி பாதையையும் ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே வண்டி பாதைனய ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். என்றார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Strong room CCTV camera malfunction; Sensation in Erode

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இதனையடுத்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாட்டுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிர்ஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.