Skip to main content

பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

 

private school bus children incident police investigation

 

தனியார் பள்ளி பேருந்தின் முன் பக்க சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த சுதா என்பவர், தனது மூத்த மகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது, அவரது ஒன்றரை வயது மகள் பவானிக்கா ஸ்ரீ தாயைப் பின் தொடர்ந்து சென்ற போது, பள்ளி பேருந்தின் முன் பக்க சக்கரத்தில் சிக்கியுள்ளார். இதைக் கவனிக்காத ஓட்டுநர், வாகனத்தை இயக்கியதால் தாயின் கண் முன்னே உடல் நசுங்கி குழந்தை உயிரிழந்தது. 

 

தகவலறிந்து சென்ற காவல்துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர் சுதாகரை கைது செய்திருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்