Skip to main content

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; பலர் படுகாயத்துடன் மீட்பு

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

 Private bus overturns in an accident; many are rescued with serious injuries

 

அரியலூர் அருகே உள்ள ராயபுரம் பகுதியில் தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் பலர் காயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

ஜெயங்கொண்டத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு செந்துறை வழியாக அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. தற்போது ராயபுரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலையின் ஓரத்தின் ஒருபுறம் பள்ளம் இருந்துள்ளது. அந்தப் பள்ளத்தில் தனியார் பேருந்தானது எதிர்பாராத விதமாக தலைக்குப்புற கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். ஒரு மாணவர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்