Skip to main content

பழங்குடியினருடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவர்

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் வருகை தந்துள்ளார். நேற்று நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளியைச் சந்தித்தார். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகை தந்துள்ளார்.

 

சென்னை வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று (5.8.2023) மாலை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார். இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ‘திராவிட மாடல்’ என்ற புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவரை வரவேற்றார். இன்று காலை சென்னையில் நடைபெற்ற, சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

 

இந்நிலையில் இன்று (06.08.2023) மாலை 3:00 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அழிந்து வரும் பழங்குடி இனத்தவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்