மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க.வின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், உள்ளாட்சித் தேர்தலின் போதும் எங்களது கூட்டணி தொடரும். எந்த இடத்தில் யார் போட்டியிடுவார் என்பது உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தே.மு.தி.க.வில் உள்ளவர்களுக்கு ராஜ்யசபாவில் இடம் வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னதாக ஏற்றுக்கொள்ளாததால் தொடர்ந்து எங்களால் தற்போது இடம் அளிக்க வேண்டுமென்று கேட்க இயலாது.
தோல்வியுற்ற போது பல்வேறு விமர்சனங்கள் எழக்கூடும். இருந்தபோதிலும் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் சமநிலையை தொடர்வது தான் நிஜமான வெற்றி.
தொடர்ந்து ஒரு தரப்பினர் மீது மட்டும் தோல்வி குறித்து பழி போடுவது தவறு. மத்திய மற்றும் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கூறிவந்தனர்.
எந்தவித மாற்றமும் நிகழவில்லை. கடந்த முறை தி.மு.க. பூஜ்ஜியம் இடங்களைப் பெற்றது. தற்போது எங்கள் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும் மற்ற தேர்தலிலும் நிச்சயம் மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தேர்தலில் பெற்ற வாக்கு வங்கிகள் எதுவும் குறைந்ததாகவே கிடையாது. 40 தொகுதியில் போட்டியிடுவதையும், 4 தொகுதிகளில் போட்டியிட்டதையும் ஒப்பிடக் கூடாது. வரவிருக்கும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும். இவ்வாறு கூறினார்.