Published on 29/10/2018 | Edited on 29/10/2018
குடியாத்தத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்,
தமிழக அரசின் செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளது. அதிமுக உட்பட எந்தக்கட்சியானாலும் பா.ஜ.க.வின் பெயரைக்கூறாமல் அரசியல் செய்யமுடியாது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும்போதுதான் வளர்ச்சியின் உச்சத்தை எட்டும். டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் முன்பிருந்ததைவிட தற்போது விழிப்புணர்வு அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது. திமுக தலைவர் மீதான விமர்சனத்தில் ஆதாரமின்றி மாஃபா பாண்டியராஜன் எதையும் கூறியிருக்கமாட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும்.