Skip to main content

அழைக்கப்படாத மக்கள்... பொதுமக்கள் எங்கே? மேடையில் கோபமடைந்த பொன்.ராதாகிருஷ்ணன்!!

Published on 26/10/2018 | Edited on 26/10/2018

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்க இருந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வராமல் புறக்கணித்ததால் நிகழ்ச்சி வெறிச்சோடியது, அதிகாரிகளை அனுப்பி மக்களை அழைத்து வரும்படி கூறிவிட்டு மேடையை விட்டு இறங்காமல் பிடிவாதமாக இருந்தது பெரும் பரபரபானது.

 

pon .rathakirishanan angry in stage why not invite the pubic people in govt function

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆதனூர் கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு மைய துவக்க விழா  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் யாரும் வராமல் புறக்கணித்ததால், நிகழ்ச்சி வெறிச்சோடி காணப்பட்டது. 

 

 

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி நடப்பது குறித்து பொதுமக்களுக்கு அரசு அதிகாரிகள் தகவல் தரவில்லை என்று புகார் எழுந்தையடுத்து ஆத்திரம் அடைந்த அமைச்சர் பொதுமக்கள் எங்கே? என கேள்வி எழுப்பி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவ துறை அதிகாரிகளை மேடையிலேயே கண்டித்தார்.

 

pon .rathakirishanan angry in stage why not invite the pubic people in govt function

 

தொடர்ந்து பேசிய  அமைச்சர் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் விழா மேடையிலே இருக்கிறேன் பொதுமக்களை அழைத்து வந்தால்தான் விழா தொடங்கும் என கூறிவிட்டார், பிறகு மக்களை அழைத்து வர கிராமத்தை நோக்கி அதிகாரிகள் புறப்பட்டு சென்று மக்களை அழைத்துவந்து நிகழ்ச்சியை  முடித்துள்ளனர். இதனால் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

சார்ந்த செய்திகள்