Skip to main content

டாக்டர் மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று காவலர் தற்கொலை!!அன்னியூரில் பரபரப்பு!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் சரஸ்வதி இவர் சென்னையில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இவரும் தமிழ்நாடு காவல் துறை சிறப்பு பிரிவில் ஓ.டியாக சென்னை விஐபி  பிரிவில் பணியாற்றி வரும் வேலூரை சேர்ந்த கார்த்திகேயனும் காதலித்து வந்துள்ளனர். 

 

murder

 

நேற்று சரஸ்வதிக்கு பிறந்தநாள் அதை கொண்டாட இருவரும் அன்னியூர் வந்து உள்ளனர். இரவு 12 மணி அளவில் பிறந்த நாள் கொண்டாடும் போது  இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது, அதிகாலை 2 மணி வரை நீடித்த  இந்த பிரச்சனையில் தகராறு முற்ற இறுதியில் கார்த்திகேயன் தனது தூப்பாக்கியால் சரஸ்வதியை 2 முறை சுட்டு கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். 

 

தகவல் அறிந்த எஸ்.பி அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி இருவரின் உடலையும் முண்டியபாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்