Skip to main content

கோவையில் சிறப்பு காவல்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

Published on 23/07/2018 | Edited on 27/08/2018
pol


கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-ம் அணி) காவலர் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அமர்நாத் (25). இவர் கடந்த 2016ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-ம்) அணியில் தற்போது பணிபுரிந்து வந்துள்ளார். அமர்நாத் நேற்று இரவு வழக்கம் போல் 10 மணி வரை பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று அதிகாலை வளாகத்தில் உள்ள காவல்துறையினர் வழக்கம் போல பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்த போது வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அமர்நாத் இருந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்ட சக போலீசார் சரகத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் காவலரின் தற்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். காவலர் ஒருவர் முகாமில் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணிச்சுமை காரணமா? திருவள்ளூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018


திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வேலை செய்பவர் ஆயுதப்படை பெண் காவலர் பிரிதிமா. இவர் இன்று காலை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற பிரிதிமாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமைனயில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்து போலீசார், காவலர் பிரிதிமா தற்கொலைக்கான காரணம் காதல் விவகாரமா அல்லது மேல்அதிகாரியின் அழுத்தம், பணிசுமை காரணமா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

காதல் மனைவியை பயமுறுத்த நினைத்த ஆயுதப்படை காவலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

 

hang


சிதம்பரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் கோவை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் திருவள்ளூரைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்பனா கோவை சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில், இருவரும் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பழையூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்தனர்.

இந்தநிலையில், ஆனந்தராஜ் திடீரென கல்பனாவிடம் நாம் சிதம்பரத்திலேயே செட்டில் ஆகி விடலாம். நான் ட்ரான்ஸ்பர் வாங்கி விடுகிறேன் என கூறிவந்துள்ளார். ஆனால், சிதம்பரம் கல்பனா வரமுடியாது நாம் கோவையிலேயே இருந்து விடலாம் என மறுத்து வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி இது தொடர்பான வாக்குவாதம் நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் இரண்டு பேருக்குமிடையில் இதே பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது கணவருடன் கோபித்துக் கொண்டு கல்பனா வீட்டு வாசலில் போய் அமர்ந்து கொண்டார். அப்போது ஆனந்தராஜ் ‘நான் சொன்னதை கேட்க மாட்டீயா..? நான் தூக்கு போட்டுக்குவேன்.. என பயமுறுத்தி வந்துள்ளார். ஆனால் கல்பனா அதனை கண்டுக்கொள்ளவில்லை.
 

 

 

இதனால், கல்பனாவை பயமுறுத்த எண்ணிய ஆனந்தராஜ், விட்டு ஹாலில் இருந்த மின்விசிறியில் துணியைக் கட்டி அதை தன் கழுத்தில் மாட்டி தூக்கு போடுவது போல நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் இருந்த துணி இறுகிவிட்டது.

நீண்ட நேரம் ஆகியும் கணவரிடம் இருந்து எந்த திட்டும் சத்தமும் வரவில்லையே என கல்பனா எதேச்சையாக வீட்டிற்குள் சென்று பார்க்க.. ஆனந்தராஜ் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு கல்பனா அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தராஜை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆனந்தராஜ் இன்னும் அபாயக் கட்டத்தில் இருக்கிறார். தன் காதல் மனைவியை பயமுறுத்த கணவன் செய்த நடிப்பு விபரீதமாக முடிந்தது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.