Skip to main content

எம்.ஆர். விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை சோதனையிட போலீஸ் முடிவு! 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Police decide to search former minister MR Vijayabaskar's bank locker

 

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.

 

தமிழக அரசு போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோரது பெயர்களிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளது சம்பந்தமாக அவர்கள்மீது கடந்த 21/07/2021 அன்று கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண்.5/AC/2021 பிரிவு 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018- ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது.

 

அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் நேற்று 22.07.2021ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூபாய் 25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று 14 மணிநேரம் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது அவரது வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கென தனி வங்கி கணக்கு இல்லை என கூறியுள்ள போலீசார், அவர் நடத்திவந்த நிறுவனங்கள், அவரது மனைவி உள்ளிட்டோரின் லாக்கர்களை சோதனையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

 

 

சார்ந்த செய்திகள்