Skip to main content

"முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்"- ஜோதிமணி எம்.பி.!

Published on 22/08/2021 | Edited on 22/08/2021

 

The plans can be implemented even better under the direct supervision of the Chief Minister

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, நேற்று (21/08/2021) காலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தார். 

 

இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நேற்று (21/08/2021) தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் இருக்கும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (Disha Committee) அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

 

ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய, மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க, மேம்படுத்த மாவட்ட அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கமிட்டி இருப்பது போல மாநில அளவில் முதலமைச்சர் தலைமையில் கமிட்டி இருப்பது மிக அவசியம்.

 

பல நேரங்களில் மாவட்ட அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் நடத்தும் கூட்டங்களில் சில கொள்கை சார்ந்த முடிவுகளை மாநில அளவில் எடுக்க வேண்டியுள்ளது. முதலமைச்சரின் நேரடிப்பார்வையில் திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்