Skip to main content

நாளை மறுநாள் தொடங்குகிறது கீழடி 7 ஆம் கட்ட அகழாய்வு!  

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

keezhadi

 

தொன்மை வாய்ந்த தமிழர்களின் கலாச்சாரம், தொழில்முறைகளைக் கண்டறிய கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நாளை மறுநாள் (பிப்.13) தொடங்குகிறது. கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியாக நான்கு இடங்களில் இந்த அகழ்வாய்வு பணியானது நடைபெற இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்