Skip to main content

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி... தமிழக அரசு தகவல்!  

Published on 25/07/2020 | Edited on 25/07/2020
forest

 

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

மலைப்பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி சுட்டுக்கொல்ல அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அதிகாரம் வழங்கி ஜூன் 4-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதாக என அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

 

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில், வனத்துறையின் ஒன்பது கோட்டங்களின் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், பயிர்களை காக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்