Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சிறையில் அடைப்பு!

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
protest


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிராக 2ஆவது நாளாக நேற்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறையினரின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 271 பேரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பேராசிரியர் பாத்திமா பாபு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாவட்ட நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி உத்தரவையடுத்து அவர்கள் 8 பேரும் வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர்.            

சார்ந்த செய்திகள்

Next Story

’போங்கப்பா.. நீங்களும் உங்க ஆர்ப்பாட்டமும்’  - கலாய்த்த போலீஸ்

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

 

கர்நாடக அரசில் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க.,வை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் 13ம் தேதி காலை நடந்தது. இதில் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி  மட்டும் மிஸ்ஸிங்.

 காரணம் இதுதான். பரமக்குடியில் நடக்கும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் சிலை திறப்பு  விழாவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்க சென்றதால் ஆர்ப்பாட்டத்தில் தலைகாட்டவில்லை.

 

tamil nadu congress - chennai -

இதனால் தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத்தை தலைமை தாங்க வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர்கள் வீரபாண்டியன். சிவராஜசேகரன், திரவியம் மற்றும் மாஜி மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஊடகப்பிரிவு செயலாளர் கோபண்ணா என பலர் முன்னிலை வகித்தனர்.

அப்படியிருந்தும் கூட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது என்னமோ குறைவானவர்கள்தான். இதனால் எதிர்பார்த்த ‘டெம்போ’ எதுவும் கிடைக்கவில்லை என்பதால், திட்டமிட்ட நேரத்தை விட ஆர்ப்பாட்டத்தை சீக்கிரம் முடித்தார்கள். 


தேசிய கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் முன்பை விட இப்போது வேகமாக தேய்ந்து வருவதை ஆர்ப்பாட்டத்தில் லைவ்வாக உணர்ந்த தொண்டர்கள் ‘என்னப்பா... கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆய்டுச்சின்னு சொல்வாங்க. ஆனா இப்போ சித்தெறும்பா ஆயிடுச்சேப்பா’ன்னு விரக்தியில் புலம்பியபடி கலைந்தனர். 


 ’போங்கப்பா.. நீங்களும் உங்க ஆர்ப்பாட்டமும்’ என பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் அங்கலாய்த்தபடி சென்றதுதான் அரசியல் ஹாட்!

 

Next Story

65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி மறுப்பு...

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

 

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி 65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி மறுப்பு.
 

tuticorin



 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மே 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் 65 பேரை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சாருஹாசினி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி சாருஹாசினி 65 பேரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.ஜாமினில் விடுதலை செய்யும் போது அரசுதரப்பில் எந்த விளக்கமும்  கேட்கவில்லை.
இதனையடுத்து அரசுதரப்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் 65 பேரின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யகோரி மனுதாக்கல் செய்யபட்டது.

 

 

இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது
"தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி 65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய நீதிபதி மறுத்தார்.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யபட்டு விசாரணையின் போது 65 பேரிடம் மாவட்ட நீதிதுறை நடுவர் பெற்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.