Skip to main content

"அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது நமது அரசு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

"Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இன்று (17/05/2022) மாலை 06.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், பட்டியலின - பழங்குடியின மக்களின் வலிகளையும், உரிமைகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். ராஜூ தொகுத்துள்ள புத்தகமான 'The Dalit Truth' என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

"Our government is committed to the development of all "Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!people" - Chief Minister MK Stalin's speech!

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான உரிமைகளை நிறைவேற்றி இருக்கிறது தி.மு.க. அரசு. பழங்குடியினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான். அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தலா ரூபாய் 5,000 நிதி வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். 

"Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவான இயக்கம் தான் தி.மு.க. பழமைவாதத்திற்கு எதிராக முற்போக்கு கருத்தைத் திரைப்படங்களில் எழுதியவர்கள் அண்ணா, கலைஞர் போன்றவர்கள். பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்துள்ளது 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம். அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது நமது அரசு; இது திராவிட மாடல் அரசு. தமிழ்நாடு பட்டியலின, பழங்குடியின ஆணையத்தை உருவாக்கி அவர்களின் உரிமைகளை நிலைநாட்டி வருகிறோம். 

"Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி இருக்கும் போதெல்லாம் அண்ணல் அம்பேத்கரின் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் சமூக நீதி, சமத்துவம் தழைத்தோங்க வேண்டும்; அப்போதுதான் மக்களாட்சி நிலைக்கும்" எனத் தெரிவித்தார். 

"Our government is committed to the development of all people" - Chief Minister MK Stalin's speech!

இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

 

சார்ந்த செய்திகள்