Skip to main content

'அதிமுகவின் சார்பாக எங்களுடைய புகழஞ்சலி'-ஓபிஎஸ் பேட்டி  

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

'Our eulogy on behalf of AIADMK' - OPS interview

 

காமராஜர் பிறந்தநாள் இன்று (ஜூலை 15) தமிழக அரசால் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை தி.நகரில் உள்ள நினைவு இல்லத்தில்  காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

 

அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.பி.எஸ், ''அனைத்து மக்களுக்கும் வாழ்ந்து காட்டிய வழிகாட்டியாகப் பெருந்தலைவராக காமராஜர் இருக்கிறார். அவருடைய புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இந்திய திருநாட்டின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. தமிழகத்தினுடைய கல்விக்கு அடித்தளமிட்டவரும் அவர்தான். தமிழகத்தின் முதல்வராக இருந்த நேரத்தில் பல்வேறு நீர் தேக்கங்களை, அணைக்கட்டுகளைக் கட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. இந்த நன்னாளில் அவரது அனைத்து பெருமைகளுக்கும் புகழஞ்சலி செலுத்துகின்ற நாளாக, அதிமுகவின் சார்பாக எங்களுடைய புகழஞ்சலியைச் செலுத்துகிறோம்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்