Skip to main content

நிர்மலா சீதாராமனை சந்திக்க தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றார் ஓ.பி.எஸ்: ஓ.எஸ்.மணியன்

Published on 25/07/2018 | Edited on 25/07/2018


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஆடி சிறப்பு கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் ஓ.எஸ் மணியன், செல்லூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம், டெல்லிக்குச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காது ஏன் என்ற கேள்வியை அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,

"துணை முதல்வரை மத்திய அமைச்சர் சந்திக்காததற்குக் காரணம், என்னவென்பதை அவரே சொல்லிவிட்டார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றுள்ளார். இதைப் பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே, கூட்டணி குறித்து கூற முடியும். அதிமுக நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எதையும் தனியாகச் சந்தித்த கட்சி, வெற்றியும் பெற்ற கட்சி என கூறினார்.

சார்ந்த செய்திகள்