Skip to main content

பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

OPS sudden letter to PM Modi!

 

கடந்த 14ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கைது செய்யப்பட்ட 23 பேரையும் இலங்கை காரைநகர் பகுதியில் தனிமையில் வைத்துள்ளனர்.

 

udanpirape

 

இதேபோல், கடந்த 26ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைக் கண்டித்து இரண்டு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இப்படி தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த கைதுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

 

OPS sudden letter to PM Modi!

 

இந்நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையினரின் இந்த கைது நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்