Skip to main content

“பாவம்! பியூட்டி பார்லர் தங்கச்சிமார்கள்!” -பாசத்துடன் உருகும் ஓ.பி.எஸ்.!

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

“சில நேரங்களில் ஓ.பி.எஸ். பிரச்சாரமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு விவகாரத்தையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, நோக்கம் போல் பேசுகிறார்.” என்றார் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன். 

 

சரி, ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார உரையைக் கவனிப்போம். 

ops election campaign

 

“ஸ்டாலினுக்கு முதலமைச்சராகணும்னு ரொம்ப ஆசை. டீ குடிக்கிறதையெல்லாம் அரசியலா பண்ணுறாரு. அதுவும் வீட்ல இருந்து ஃப்ளாஷ்க்ல இருந்து கொண்டுவந்த டீயை ஊற்றி குடிக்கிறாரு. ஆனா., நாமவந்து டீ கடையே நடத்திருக்கோம். டீ கடை நடத்தின நம்மகிட்ட ஸ்டாலின் பாட்சா பலிக்குமா? பலிக்காது. ஏன்னா.. நாம தொண்டர்களோடு தொண்டர்களா வாழறவங்க. மக்களுடைய எண்ணங்களைப் புரிந்து ஆட்சி செய்பவர்கள். 

 

எதிர்க்கட்சியா இருந்தாலும் திமுக கையில் எடுக்கிறது வன்முறைக் கலாச்சாரம்தான். நம்ம தங்கச்சிமார் ரெண்டு மூணுபேர் சேர்ந்து பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. அழகுநிலையத்தில் என்ன பெரிசா வருமானம் வரப்போகுது? பாவம்.. மணப்பெண்களுக்கு மேக்கப் போடுறதுல அஞ்சு பத்து கிடைக்கும். அங்கே போய் மாமூல் கேட்கிறாங்க.” என்று பேசினார்.  

 

 

ஓ.பி.எஸ். சொன்ன டீக்கடை அரசியல் பொதுஜனத்தை சிரிக்க வைத்தது. பியூட்டி பார்லர் அரசியலோ கவரவில்லை. காரணம் - பியூட்டி பார்லர் விவகாரம் குறித்து ஒன்றும் தெரியாதவராக ஓ.பி.எஸ். இருப்பதுதான்.  பியூட்டி பார்லரில் என்ன நடந்தது என்பதை ஓ.பன்னீர்செல்வத்துக்காக, இங்கே  ‘ரிபீட்‘ செய்கிறோம். 

 

ops election campaign

 

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் தனது வீட்டின் மாடியில் மயூரி பியூட்டி பார்லர் நடத்திவந்தார் சத்யா. வேப்பந்தட்டையில் குடியிருந்துவரும் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமாரோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இவ்விருவருக்கும் இடையில் புகுந்தார் திமுக நகர செயலாளர் பிரபாகரன். ஒரேயடியாக பிரபாகரன் பக்கம் சத்யா சாய்ந்துவிட, பியூட்டி பார்லரில் தாக்குதல் நடந்தது. இந்த விவகாரத்தை அடிவாங்கிய அந்தப் பெண்ணே பெரிதுபடுத்தவில்லை. ஆனால், பிரபாகரன் எடுத்த முயற்சியால்,  பியூட்டி பார்லர் சிசிடிவி ஃபுட்டேஜ் ஊடகங்களில் வெளியானது. அதனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் செல்வகுமார். தற்போதைய நிலவரம் என்னவென்று தெரியுமா? அந்தப் பெண்ணோடு கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றித்திரிகிறார் செல்வகுமார். எல்லோருக்கும் தெரிந்த இந்த விவகாரம், துணை முதல்வரான ஓ.பி.எஸ்.ஸுக்கு தெரியாமல் போய்விட்டது. அவரும், பியூட்டி பார்லரில் திமுகவினர் மாமூல் கேட்பதாக, இஷ்டத்துக்கு அள்ளிவிடுகிறார். 

 

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தப் பிரச்சாரத்துக்காகவே, அந்தக் கள்ளக்காதல் ஜோடியின் அடுத்த வீடியோவை வெளியிடப் போகிறதாம்,  பிரிவைத் தாங்க முடியாமல் உஷ்ணத்தில் தவிப்பவர் தரப்பு.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.