Skip to main content

ஆன்லைன் வகுப்புகள்... உற்சாகமாக பாடம் கற்கும் மாணவர்கள்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவறையின்றி  விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு  தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன.


அந்த வகையில் தமிழகத்தில் பெரும்பாலான அரசு மற்றும்  தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. பள்ளிகளில் காலை 09.00 மணிக்கு வகுப்புகள் தொடங்குவது போல  மாணவர்கள் குளித்து முடித்து, காலை உணவு முடித்துவிட்டு தங்களது வீட்டில் உள்ள செல்போன் மற்றும் டேப், லேப்டப் போன்ற சாதனங்களை ஆன் செய்து தயாராக இருந்தனர்.


சரியாக காலை 09.00 மணிக்கு அவர்களது ஆசிரியர்கள் வீடியோ காலில் அவர்களது வகுப்பில் உள்ள அனைத்து மாணவ, மாணவர்களையும் இணைத்து அனைவருக்கும் பாடம் எடுத்தனர். வகுப்பு முடியும்போது இன்று படிக்க வேண்டிய வீட்டுபாடத்தை படித்து விட்டு நாளை காண்பிக்க வேண்டும் என்று கூறினர். இந்த புது விதமான வகுப்பால் மாணவர்கள் உற்சாகமாக பாடம் கற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்