Skip to main content

எப்போ வரனும் என்பது முக்கியமல்ல; வந்தால் ...-2.0 ட்ரைலர் விழாவில் ரஜினிகாந்த்!!

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
2.0

 

2.0 படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்கி நடைபெற்று இயக்குனர் சங்கர், நடிகர் ரஜினகாந்த், அக்ஷய்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் கூட்டாக படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர்.

 

 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,

 

இந்த படத்தின் பெருமை அனைத்தும் இயக்குனர் சங்கரையே சேரும். ஒரு பொழுதுபோக்கு படத்தின் மூலம் நல்ல ஒரு கருத்தையும் படத்தில் கூறியுள்ளோம். உடல்நிலை காரணமாக இந்த படத்தில் இருந்து ஆரம்பத்தில் பாதியிலேயே வெளியேற நினைத்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியது. எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரனும். வந்தாச்சு வெற்றி உறுதியாகிவிட்டது. ஹிட் ஆக்குவதுதான் பாக்கி... நான் படத்தை சொன்னேன் என தனக்கே உரிய பாணியில் சொன்னார்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்