Skip to main content

’’நானே செத்துப்போனதாக செய்திகள் பரப்பப்பட்டன’’ - கே.ஆர்.விஜயா பேட்டி

Published on 12/05/2018 | Edited on 13/05/2018
kr

 

 

 

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா ‘சரணம் பல்லவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  சேலம் ஊத்துமலை முருகன் கோவிலில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

அப்போது அவர்,  ‘’நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் சினிமாவுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, மக்களுக்கு ஏராளமான அறிவுரைகள் கூறி உள்ளனர். முன்புபோல் தற்போதைய படங்களில் கதைகள் இருப்பதில்லை. தற்போது வேறு விதமான கதையுடன் படங்கள் வருகிறது. கடைசி மூச்சு இருக்கும்வரை நான் தொடர்ந்து நடிப்பேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனித்திறமை உண்டு.

 

krv

 

எந்த நடிகருக்கும் அறிவுரை சொல்லும் அளவில் நான் இல்லை. அதேபோன்று நடிகர், நடிகைகள் கிசுகிசுவிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நானே செத்துப்போனதாக செய்திகள் பரப்பப்பட்டன. அதையும் தாண்டி நான் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். 

 

krvv

 

எனக்கு அரசியல் தெரியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வந்து, ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து உள்ளனர். தற்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை இருக்கிறது.’’என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்