Skip to main content

சிக்கன் சைவமா? நயன்தாரா வெளியிட்ட வீடியோ!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019
n

 

ஆ.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கவிருக்கிறார்.   இது குறித்து பாலாஜி, கன்னியாகுமரி அம்மனைப்பற்றிய படம் இது. ஆதலால் அந்த அம்மன் ஆலயத்திலேயே பூஜை போட்டு படத்தை துவங்கவிருக்கிறோம்.   இப்படத்தில் பங்கேற்றுள்ள அனைவரும் சைவ உணவுக்கு மாறிவிட்டோம்.  நயன்தா விரதமே இருந்து வருகிறார்.  விரதத்திற்கு பின்னர் அவர் சைவை உணவுதான் உட்கொள்வார் என்று தெரிவித்திருந்தார்.  பாலாஜி இப்படி சொன்னபின்னர், நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றிருந்தார்.  

 

அமெரிக்காவில் நயன்தாரா விரதம் இருக்கிறாரா? இல்லை, அசைவத்தில் புகுந்து விளையாடுகிறாரா?அவர்களுக்கே வெளிச்சம் என்று ரசிகர்கள் முணுமுணுத்துக்கொண்டார்கள்.  ஆனால், தான் விரதம் இருக்கவில்லை.  அதே நேரத்தில் சைவம் எல்லாம் இல்லை...அசைவம்தான் சாப்பிடுகிறேன் என்று வீடியோ மூலம் போட்டு உடைத்துவிட்டார் நயன்தாரா.

 

சிக்கன் சாப்பிடுவதான் விரதமா? சிக்கன் சைவமா? என்றெல்லாம் கேட்டு, ஆர்.ஜே.பாலாஜியை காய்ச்சி எடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

 

சார்ந்த செய்திகள்