Skip to main content

தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் முத்தலாக் சட்டம் – திணறும் அதிமுக!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

வேலூர் நாடளுமன்ற தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என அதிமுகவின் சிறுபான்மையின பிரிவின் மாநிலதுணை செயலாளரான முன்னாள் அமைச்சரும், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபருமான முகமது ஜான்னை மாநிலங்களவை எம்.பியாக்கியாக்கியது அதிமுக தலைமை.

அவரும் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு போன்ற பகுதிகளில் வலம் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதோடு, தோல்தொழிற்சாலை அதிபர்கள், ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலை போட்டியிடுகிறது, அதனால் அதிமுகவுக்கு ஆதரவளியுங்கள் என பேசி வருகிறார்.

இந்நிலையில் இந்த வாரம் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டத்தை ஆளும்கட்சியான பாஜகவின் மோடி அரசாங்கம் கொண்டுவந்தது. இந்த சட்டம் இஸ்லாத்தின் ஷரியத் விவகாரத்தில் தலையிடுகிறது என இதனை கடுமையாக இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் எதிர்த்து வருகின்றன, போராட்டமும் நடத்தியுள்ளன.

 The Muthalak law, echoing in the electoral field


இதற்கு முன்பே இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக போன்றவை எதிர்த்தன. இந்நிலையில் தற்போது, இந்த சட்டத்தை அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசி வாக்களித்தார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணியால், அதிமுக ஆதரவு இஸ்லாமியர்கள் மட்டும்மல்லாமல், அதிமுக உறுப்பினராகவுள்ள இஸ்லாமியர்களே கோபத்தில் இருந்தனர். அந்த கோபத்தை தணிக்க தான் முகமதுஜானை எம்.பியாக்கி, வேலூர் மாவட்ட இஸ்லாமியர்களை சமாதானம் செய்து வந்தது. இந்நிலையில் முத்தலாக் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களித்துள்ள நிலையில் இது தற்போது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை உணர்ந்த அதிமுக, உடனடியாக அமைச்சர்கள் நிலோபர்கபில், ஜெயக்குமாரை செய்தியாளர்களை சந்திக்க சொன்னது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள அமைச்சர்கள் வாணியம்பாடியில் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து, கடந்த காலத்தில் ஜெயலலிதா எடுத்த முடிவையே நாங்கள் எடுத்துள்ளோம், இந்த சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவானது எனச்சொல்லியுள்ளனர்.

​இந்த விவகாரத்தை திமுக கையில் எடுத்து, இஸ்லாமியர்களின் எதிரி அதிமுக என்பது இப்போதாவுது தெரிந்ததா? தெரியவில்லை என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனை முறியடிக்க முடியாமல் திணறுகின்றனர் அதிமுகவினர்.
 

சார்ந்த செய்திகள்