Skip to main content

புவனகிரி அருகே சொத்துப்பிரச்சனையில்  2 பேர் கொடூரமாக கொலை!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

சொத்து பிரச்சனை காரணமாக சொந்த அண்ணன் மகனைக் கொடூரமாக கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் விஜயன்(58). இவரது அண்ணன் கணேசன். இவரது மகன் குருசேவ் (28). இவருக்கும் விஜயனுக்கும் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்த குருசேவ், கடந்த 3 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். 

 

murder

 

இன்று இரவு சொத்துப்பிரச்சனை சம்பந்தமாக பேச அவரது நண்பர் அபின் உடன் சேர்ந்து குருசேவ் தனது சித்தப்பா விஜயன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயன் மற்றும் அவரது மகன் கோபி(24) இருவரும் கடப்பாரை மற்றும் கத்தியால் குருசேவ் மற்றும் அவரது நண்பரையும் சாரமாரியாக குத்தியும், வெட்டியும் உள்ளனர்.

 

இதில் சம்பவ இடத்தில் 2 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து விஜயனும் அவரது மகன்  கோபியும் புவனகிரி காவல்நிலையத்தில் சரணடைந்தனர். போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் குருசேவ் மற்றும் அவரது நண்பர் ஆகிய 2பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்