Skip to main content

ரயில்வே கேட் கீப்பரிடம்  மன்னிப்பு கேட்ட எம்.பி.

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
u

 

கடந்த 2 ம்தேதி மால திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரான உதயகுமார் நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்  வரும்போது அழகம்பட்டி  ரயில்வே கேட் சாத்தி இருப்பதைக்கண்டு கேட் கீப்பர் மணிமாறனை மிரட்டி உடனே கேட்டை திற  என்று எம்பி கூறியுள்ளார்.  அதற்கு கேட் கீப்பர் மணிமாறன்,  ரயில் வரப்போகிறது வந்த பின்புதான் திறக்க முடியும்.  அதற்கு முன்பு திறக்க முடியாது .அதுதான் விதிமுறை என்று கூறியிருக்கிறார்.

 

 இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிட கேட்கீப்பரை எம்பி அடித்து விட்டார்.  இதனால் டென்ஷனான கேட் கீப்பர் சக ஊழியர்களுக்கு தகவல்  கொடுத்ததின் பேரில் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ரயில்களின் போக்குவரத்து காலதாமதம் ஏற்பட்டது. அதன்பின் போலீசார் மணிமாறனை சமாதானம் செய்தனர்.  அப்படி இருந்தும் மணிமாறன் தன்னைத் தாக்கிய எம்பி உதயகுமார் மேல் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துவிட்டு மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

 

g

 இந்த விஷயம் எம்பி உதயகுமார் காதுக்கு எட்டவே தன்னை மணிமாறன் தரக்குறைவாக பேசி நெஞ்சில் தாக்கியதால் கீழே விழுந்து விட்டேன் என்று கூறி போலீசில் மணிமாறன் மேல் புகார் கொடுத்துவிட்டு அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து விட்டு அதன் பின் திண்டுக்கல் வந்து அங்கிருந்து மதுரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.   இந்த விஷயம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

m


   இந்த நிலையில்தான் திடீரென எம்பி உதயகுமார் பாதிக்கப்பட்ட மணிமாறனை மதுரை மில் உள்ள  கோட்ட அலுவலகத்தில் நேரில் சந்தித்து நான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டார்.  அதுபோல் இனிமேல் இது போன்று தவறுகள் நடக்காது.  அதுபோல் மணிமாறனுக்கு என்னால் எந்த பிரச்சினையும் வராது என்று உறுதி அளித்தார். ஆனால் எம்.பி. தான் கேட்கீப்பரை தாக்கி இருக்கிறார் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.  அப்படி இருந்தும் கூட  அதை மூடி மறைக்க தன்னை கேட்கீப்பர் தாக்கியதாக வேண்டும் என்றே போலீசில் புகார் கொடுத்து விட்டு மருத்துவ மனைக்கு போய் நெஞ்சுவலி என்று கூறி சிகிச்சை பெற்றார். ஆனால் அது எடுபடவில்லை.  அதோடு கட்சிக்காரர்கள் மத்தியிலும்  எம்.பி. உதயகுமாருக்கு சரி வர ஆதரவு இல்லை.  

 

இந்த நிலையில் தான் ரயில்வே தொழிலாளர்கள்  ஒட்டு மொத்தமாக எம்.பிக்கு எதிராக போர் கொடி தூக்கினார்கள்/ அதை கண்டு அறண்டு போய் தான் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இப்படி ரயில்வே தொழிலாளர்களின் ஒற்றுமை மூலம்  மன்னிப்பு கேட்க வைத்த SRMU விற்கு கிடைத்த மாபெறும் வெற்றியாகும்.  இதற்காக  அனைத்து தொழிலாளர்களுக்கும் SRMU/ MDU.சார்பாக நன்றியையும் தெரிவித்து கொண்டது. அதோடு ரயில்வே தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையென்றால் உடனே வருவது SRMU பேரி இயக்கம் மட்டுமே என மார்தட்டி கொண்டனர்.
    
 

சார்ந்த செய்திகள்