Skip to main content

மோடியும் அமித்ஷாவும் ஹிட்லர், முசோலினி! ரஜினிக்கு மார்க்சிஸ்ட் பதிலடி

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

’’மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர்,கிருஷ்ணர் இல்லை. அவர்கள் இருவரும் ஹிட்லர், முசோலினி என விரைவில் நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார்,’’ என்றார்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன்.

  பல்வேறு நிகச்சியில் கலந்து கொள்வதற்காக திருவாரூர்  வந்திருந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

 

b


’’மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எப்போதுமே ஒரு செய்தியை எடுத்து விவாதிப்பது வழக்கம். அந்தவகையில் சட்டவிதி 370 குறித்து விவாதம் நடத்தியதற்கு 30 மாணவர்கள் மீது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பது வேதனையை அளிக்கிறது. இச்செய்கை கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.  

 

மத்தியஅரசு குறித்து விவாதம் செய்ய கூடாது என்பதற்காகவே பல்கலைக்கழக நிர்வாகம் மத்திய மோடி அரசின் தலையாட்டி பொம்மை போல் செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதை வாபஸ் வாங்காவிடில் அனைத்து கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.  

 

 நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிவருவது சந்தர்பவாத பேச்சு.    மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர் கிருஷ்ணர் இல்லை அவர்கள் இருவரும் ஹிட்லர், முசோலினி என்பதை விரைவில் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார். 

 

சிபிஎஸ்சி பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தீர்மானத்திற்கும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் அரசே அந்த தொகையை செலுத்த வேண்டும்.இந்த தொகையை அரசு செலுத்துவதால் அரசு கஜானா ஒன்றும் காலியாகிவிடாது. அதோடு தமிழகத் பிரச்சினையில் முதல்வர் ஏதோ குறை கேட்பு கூட்டத்தில் மனு கொடுப்பது போல் மத்திய அரசிடம் கடிதம் கொடுத்து வருகிறார், மொத்தத்தில் தமிழகத்தை காவு கொடுக்கும் நிலை நடந்து வருகிறது.’’ என்றார்.
 

சார்ந்த செய்திகள்